உயிர்போகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறாராம் வண. அமில தேரர்
தாம் நடாத்தும் நடை பவனியைக் கணக்கில் எடுக்காமல், கல்வியைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது விட்டால், தாம் சாகும் வரையிலான உணாவிரதத்தை ஆரம்பிக்கப் போவதாக, பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் துணைத் தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர் வண. தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
28 ம் திகதி நடை பவனியின் இறுதியில் கொழும்பு ஹைட்பார்க்கில் உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். அத்துடன் உண்ணாவிரதம் கொழும்பு கோட்டை ரயில்வே நிலைய முன்றலில் மட்டுமல்லாது, நாடுமுழுதும் உள்ள ஒவ்வொரு பல்கலைக் கழகத்தின் கதவுகளுக்கு முன்னாலும் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment