பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கை நிலைமை யதார்த்த நிலைமைக்கு திரும்பியுள்ளது என்றும், அப்பகுதி மக்கள் தற்போது புன்முறுவல் பூத்த முகத்துடன் வாழ்ந்து வருவதாக பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொதுநலவாய அமைப்பின் செலாளர் சந்தித்த போதே இவ்வாறு கூறினார்.
கமலேஷ் சர்மா வட கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். அடுத்த வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினை நடத்துவது தொடர்பாக இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டது.
இம்மாநாட்டை நடத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்தியுள்ளமை தொடர்பாக கமலேஷ் சர்மா ஜனாதிபதிக்கு தனது நன்றியினை தெரிவித்தார். இதனால் அடுத்த வருடம் பொதுநலவாய அமைப்பு மாநாட்டினை வெற்றிகரமாக நடத்த முடியுமென அவர் தெரிவித்தார். மாநாட்டின் தொனிபொருளை உருவாக்குவதன் விதம் தொடர்பாகவும் இப்பேச்சுவாதர்த்தையின் போது ஆராயப்பட்டது.
இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாகவும் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. இளைஞர்களின் கணினி அறிவினை அபிவிருத்தி செய்வது, தகவல் தொழில்நுட்ப திறனை விருத்தி செய்வது, வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்கள் இத்தொனிப்பொருளின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டுமென இப்பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
இச்சந்திப்பில் அமைச்சர் பேராசிரிpயர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே வேளை ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவின் பாரியார் பப்ளி ஷர்மா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது.
No comments:
Post a Comment