Thursday, September 13, 2012

தழிழர் உரிமைகள் தொடர்பாக கலந்துரையாடல் நடாத்தப்பட வேண்டும் - தென்னாபிரிக்கா

தமிழ் மக்களின் உரிமைகள், மற்றும் சுதந்திரங்கள் தொடர்பாக கலந்து ரையாடல் நடாத்தப்பட வேண்டும் என்று தென்னாபிரிக்க அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதுடன், போருக்குப் பின்னரான இலங்கையை மீள அமைத்தல், மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல், தொடர்பில் இலங்கை அரசுக்கு இடையறாத ஒத்துழைப்பை வழங்குவதாக, பன்னாட்டு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான தென்னாபிரிக்க திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், தேசிய மட்டத்தில் உண்ணாட்டுப் பொறுப்புக் கூறுவதற்கான விடயங்களைத் தீர்ப்பதில் முன்னுரிமையும், முக்கியத்துவமும், வழங்கப்பட வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், இவை தொடர்பாக செய்து காட்டக்கூடியதும் உறுதியானதுமான முயற்சியும் செயல்பாடும் தேவை என்றும் கூறியுள்ளது.

இலங்கை அரசாங்கத் தலைவர்கள், தமிழ் சமூகம், அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனையோரைச் சந்திப்பதற்காக தொன்னாபிரிக்க குழுவினர் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தனர்.

இலங்கையில் நடைபெற்ற பயங்கர உண்ணாட்டுப் போருக்குப் பின்னர் இன்றும் தீர்க்கப்படாதிருக்கும் பிச்சினைகளுக்கான தீர்வுகளைப் பற்றிப் பேசுவது தொடர்பாகவும், 2012 மார்ச்சு மாதம் பிரிடோரியாவில் நடைபெற்ற தென்னாரிக்க பன்னாட்டுறவு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் திருமதி நிகோன்னா-மசாபானே மற்றும் இலங்கை வெளிநாட்டமைச்சர் பேரா. ஜி.எல்..பீரிஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் தொடர்ச்சியே தென்னாபிரிக்க குழுவின் வருகையின் நேக்கமாக இருந்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த சந்திப்பின் போது, இதர விடங்களுடன் தமிழ் பிரச்சினை தீர்வு தொடர்பாக இரண்டு நாடுகளும் உறுதியும் ஆழமானதுமான உறவைக் கொண்டிருக்க வேண்டி தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment