உலகத்தில் சிங்களவர் என்று இன்னொரு இனம் எமக்கு உறவினராக இல்லை - வண. எல்லாவலை
அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. வீட்டில் இருக்கிறார். மகன் சிறுவர் பாடசாலையில் ஆங்கிலத்தில் படிக்கிறார். சிட், ரைட் என்று அம்மாவும் சொல்கிறார், இவ்வாறான ஒரு நிலமை ஏன்?.
சிறுவர் பாடசாலைகளில், ஆங்கிலத்தில் கதைப்பது ஒரு ஃபெஷனாக (காலத்தின் கோலம்) வந்து விட்டது என்று வண. அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தர்பாலாவின் 148 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் வண. அத்துரலியே ரத்ன தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், "நாம் ஆங்கில மொழியைப் படிக்க வேண்டும். ஆனால், நாம் ஆங்கிலத்தைக் கற்றாலும் ஆகக் குறைந்தது எமது ஆரம்பக் கல்வியை எமது தாய்மொழியில் கற்பது கட்டாயமாகும்". எனினும் இறுதிப் பகுதியைப் போல இன்று சிறுவர் பாடசாலைகளிலும் ஆங்கிலத்தில் கதைப்பது ஒரு ஃபெஷனாக மாறிவிவிட்டது என தெரிவித்துள்ளார்.
அத்துடன், அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. வீட்டில் இருக்கிறார். மகன் சிறுவர் பாடசாலையில் படிக்கிறார். சிட், ரைட் என்று அம்மாவும் சொல்கிறார், சிட் மகனே, சிட் மகனே, ரைட் மகனே, ரைட் மகனே என்று ஆரம்பக் கல்வியை ஆங்கிலத்தில் வழங்குவது எமது நாட்டை உருக்குலைய வைக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்' என தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய கலாநிதி வண. எல்லாவலை மேத்தானந்தா தேரர் ' உலகத்தில் சிங்களவர் என்று இன்னொரு இனம் எமக்கு உறவினராக இல்லை. நமக்குத் தொடர்புள்ளதான ஒரே சக்தி பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டதே. அதனால்தான், அவர் சிங்கள இனத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் பௌத்த சமயத்தை உலகம் பூராவும் கொண்டு சென்றார்.
ஆனால், கடைசியில் "சிங்கள இனத்தை இலங்கையில் பாதுகாக்கும் முக்கிய காரணியாக விளங்கும் பௌத்த சமயத்தை மேம்படுத்துவதற்கு தற்போதுள்ள எந்தவொரு மக்கள் தலைவரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment