Thursday, September 13, 2012

ஈழம் என்பது சாத்தியமல்ல! மீனவர்கள் எல்லை தாண்டினால் தாக்கப்படுவது சாதாரணமானது

ஆயிரம் ஜோடிகளுக்கு இலவச திருமண திட்டத்தை முன்மொழிந்து, அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர், அத்திட்டத்திற்கிணங்க திருவுண்ணாமலை மாவட்டம் எடத்தனூர் கிராமத்தில் திருமணங்களை நடத்தி வைத்தார்.

திருமண விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டாக்டர் பாரிவேந்தர், "தனி ஈழம் என்பது சாத்தியமல்ல" என்றும், எங்களது கட்சி தனி ஈழத்துக்கு ஆதரவானது அல்ல என்றும், ஈழ ஆதரவு கட்சிகள் யாரோ ஒருவரை தலைவராக கொண்டு பொது மக்களை பலி கொடுத்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் தாக்கப்படுவது சாதாரணமானது என்றும், மீனவர்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டு மெனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment