எட்ட முடியாத தூரத்திலுள்ள நோரு தீவுக்கு நாடுகடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள்
"நாங்கள் நோரு தீவுக்கு போவதை விட இலங்கைக்கே திரும்பிப் போக விரும்புகின்றோம்" என்று 14 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தன்னிடம் தெரிவித்ததாக, குடிவரவுப் பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் கூறியிருப்பதை, சமஷ்டி அரசாங்கம் உறுதிப்படுத்த மறுத்து விட்டது என அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
குடிவரவு அமைச்சர், மற்றும் குடியுரிமைத் திணைக்களமும், ஸ்கொட் மொரிசனின் கூற்று தொடர்பில் கருத்து தெரிவிக்க தயக்கம் காட்டியதாகவும், அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஏற்கனவே 30 இலங்கையர்கள் பசுபிக் பெருங்கடலில், வெகு தூரத்தில் தனித்துள்ள நோரு தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும், மீண்டும் 36 பேர் நோரு தீவுக்கு அனுப்பவுள்ளதுடன், பெண்களும் குழந்தைகளும் இதில் உள்ளடங்குகின்றனர் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment