பிரித்தானியாவில் புகலிடம்கோரியிருந்த ஒருதொகை இலங்கையரை நாடுகடத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆகக் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வாடகை விமானங்கள் வரும் புதன் கிழமை எண்ணிக்கை தெரியாத தமிழர்களை ஏற்றிக்கொண்டு இலங்கை புறப்படுகின்றன. அவை தரையிறங்கும் வரை அவை பற்றிய தகவல்களை வெளியிட முடியாது என்று யூகேபிஏ எனப்படும் ஐக்கிய இராச்சியத்தின் எல்லை முகவரகம் மறுத்துள்ளது.
சித்திவதைக்கு உள்ளாக்கப்பட்ட மாட்டார்கள் என்று தாம் நம்பும் ஆட்களையே திருப்பி அனுப்புவதாக உண்ணாட்டு அலுவலகம் கூறுகின்றது. ஆனால், சித்திரவதையில் இருந்து விடுலை மற்றும் மனிதவுரிமைக் காப்பகம் என்பன தமிழர் இலங்கைகுத் திரும்பினால் என்ன நடக்கும் என்பதை ஐ.ரா. அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளது என்று குற்றம் சுமத்துகின்றன. இலங்கை திரும்பும் அகதிகள் வழமையாக, அவர்கள் வெளிநாடுகளில் எல்ரிரிஈ உடன் தொடர்பு கொண்டிருந்தார்களா என்று கேட்டு சித்திரவதை செய்யப்படுகின்றார்கள் என்று தகவல்கள் கிடைக்கின்றன என அவ்வமைப்பு மேலும் தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் பிரித்தானியாவின் த கார்டியன் பத்திரிகை 'பிரித்தானிய செவிடன் காதில் ஊதிய சங்கு' எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் மனிதவுரிமை மீறல்கள் அதிகரித்துச் செல்கின்றன என்ற நிலையிலும், அடுத்த கிழமை இரண்டு வாடகை விமானங்கள் இலங்கை நோக்கிப் பறக்கவிருக்கின்றன. ஐக்கிய இராச்சியத்தில் பல தமிழர்கள் தாங்கள் இலங்கையில சித்திரவதைக்கு உள்ளானதால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால், நாடு திரும்பினால் தமிழர்கள் சித்திரவதைக்கு ஆளாவார்கள் என்ற மனிதவுரிமை கோரிக்கைகளை அலட்சியம் செய்து, ஐக்கிய இராச்சியம் பெருந்தொகையான தமிழர்களை அடுத்த கிழமை நாடுகடத்தும் செயற்படுகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment