இலங்கை, இந்திய பெண்களை பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் முகவர்கள்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கை, இந்திய பெண்களை தொழில்வாய்புக்கு என கூறி அழைத்துச் சென்று அங்கு முகவர்கள் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர் என இந்திய புலனாய்வுத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து இவ்வாறான பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு பலவந்தமாக இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் இந்திய புலனாய்வுத் தரப்பில் முறையிட்டுள்ள போதும், பலர் முறைபாடுகளை தெரிவிக்க முன்வர தயங்குவதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்திய புலனாய்வுத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்
0 comments :
Post a Comment