ஊடகவியலாளர் ஒருவர் தலையற்ற நிலையில் சடலமாக மீட்பு
சோமாலியா தலைநகர் Mogadishu ல் ஊடகவியலாளர் ஒருவர் தலையற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் Abdirahman Mohamed என்ற ஊடகவி யலாளரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் சோமாலிய அரசாங்கத்திற்கு சொந்தமான இணையத்தளம் ஒன்றில் பணியாற்றி வருவதாக குறிப்பிடப்படுகிறது அத்துடன், குறித்த ஊடகவியலாளரின் கொலை சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு அமைப்பினரும் பொறுப்பேற்காத நிலையில், குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் சோமாலிய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதில் சோமாலியா முதலிடத்திலுள்ளதுடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 14 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment