Tuesday, September 18, 2012

'மலரும் இலங்கை " லண்டனில் புகைப்படக்கண்காட்சி!

'மலரும் இலங்கையில் " (Bloom In Srilanka) என்ற தொனிப்பொருளில் இலங்கையின் புகைப்படக் கண்காட்சி ஒன்று லண்டன் நகரில் நாளை ஆரம்பாகிறது. நாளை 19ஆம்திகதி காலை 9.30மணி முதல் இரவு 9.30மணி வரை லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் நடைபெறும் இந்த புகைப்படக்கண்காட்சியை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள்- வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் பார்வையிடலாம்.

அவ்வாறே, நாளை மறுதினமான 20ஆம்திகதி லண்டன் பர்மின்ஹேம் நகரில் நடைபெறும் இதே புகைப்படக்கண்காட்சியை லண்டனிலுள்ள இலங்கையர்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்படுகிறது.

மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நடைபெற்ற கொடிய யுத்தம் , பயங்கரவாத யுத்தத்தின் படிப்பினைகள், யுத்தப்பிரதேத்தில் மேற்கொள்ளப்பட்ட மனாதாபிமான நடவடிக்கைகள் , விடுதலைப்புலிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகள்,

ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் இலங்கைக்கு எதிரான பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் வடக்கு -கிழக்கு பகுதிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றை சித்தரிக்கும் புகைப்படங்களும் இலங்கையின் எழில்கொஞ்சும் இயற்கைக்காட்சிகளை உள்ளடக்கிய புகைப்படங்களும் இந்தக்கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

இதேவேளை செப்டம்பர் 28ஆம் திகதி பிரான்ஸின் தலைநகரான பாரிஸிலும் இந்த புகைப்படக்கண்காட்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com