இலங்கை ஜனாதிபதி வருகை பற்றி மத்திய பிரதேச பொலிசுக்குத் தெரியாதாம்.
மேலிடத்து உத்தரவு கிடைத்தவுடன் விவிஐபி க்களுக்கான உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.கே. பாண்டே
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செப். 21 ல் சாஞ்சியில் உள்ள பௌத்த பல்கலைக் கழகத்தில் அடிக்கல் நாட்டுவதற்கு வருவது பற்றிய எந்தவித உத்தியோக பூர்வ அறிவித்தலும் தமக்கு வரவில்லை யென்று ரைம்ஸ் ஒவ் இந்தியாவுக்கு மத்திய பிரதேச பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.
விவிஐபி-க்கள் வருவது பற்றிய அறிவித்தல் எமக்கு கிடைத்தவுடன் அவர்களுக்கான முழுப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.கே. பாண்டே கூறியுள்ளார்.
மத்தியில் இருந்து மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வரவேண்டிதில்லை என்றும் மாநில பொலிஸ் நிமையைக் கையாளும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், பிரதம செயலாளர் ஆர். பரசுராம், 21ம் திகதி சாஞ்சி பௌத்த பல்கலைக் கழகத்தில் நடைபெறவிருக்கும் பூமி பூஜா மற்றும் 222, 23 ம் திகதிகளில் நடைபெறவிருக்கும் தர்மா-தர்மா சம்மேளனம் ஆகியன பற்றிய ஏற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான கூட்டத்தை புதன்கிழமை மந்திராலயாவில் நடாத்தியுள்ளார். அதிதிகளை வரவேற்றல், சாஞ்சி மற்றும் போபாலில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஆசன ஒழுங்கமைப்புகள், பார்க்கிங் வசதிகள், லொட்ஜிங், உணவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடியுள்ளனர்.
இதேநேரம் இலங்கை யாத்திரிகர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்கப்பட்டமை இருந்நாடுகளுக்குமான உறவைப் பாதிக்காது எனவும் அரசாங்கம் என்ற முறையில் நாங்கள் மத்திய அரசாங்கத்துடன் பலமான உறவை கொண்டுள்ளோம், இதன் பிரதிபலனாக இந்திய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அமைச்சர் டலஸ் அழகப்பெருமா கூறியுள்ளார்.
மேலும் இறுதிப் போரின் போது தமிழ் நாட்டில் பல எதிர்ப்புகள் வந்த போதும், இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கி கிளர்ச்சியாளர்களைத் தோற்கடித்து யுத்தத்தை வெற்றி கொள்ளச் செய்தது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment