இலங்கைக்குப் படையெடுக்கும் சீனத் தலைவர்கள்
சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங்சினின் அண்மைய வருகையை அடுத்து, சீன ஜனாதிபதி ஹூ ஜின்டாவோவுக்கு அடுத்த நிலையில் உள்ள வு பிங்குவோ 150 பேர்களைக் கொண்ட குழுவுடன் சனிக்கிழமை இலங்கை வந்தடைந்தார்.
அத்துடன் இவ்வருகையினால் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் 16 இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாதிடப்பட்டன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், திறைசேரிச் செயலாளர் பி. பி. திசநாயக்கா, மற்றும் ரயில்வே பொது முகாமையாளர் பி.ஏ.பி. ஆரியரத்ன உள்ளிட்ட பலர் இலங்கை சார்பில் உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சீனக் குழுவினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
0 comments :
Post a Comment