Monday, September 3, 2012

காணிக் கைமாற்றத்தில் சீன அரசாங்கத்தின் எந்தவித தலையீடும் இல்லை - வென் ஸொங் லிம்

கொழும்பில் மிகப் பெறுமதி வாய்ந்த காணியொன்றை, வெளிநாட்டுத் தொடர்புள்ள ஒரு உள்ளூர் கம்பனியால் கைமாற்றம் செய்யப்பட்டது தெடர்பில் சீன அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்று அந்த கம்பனியின் பேச்சாளர் ஒருவர் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் காலி வீதியை எல்லையாகக் கொண்ட "ஷோ வலஸ் அண்ட ஹெட்ஜஸ் பிஎல்சின்" ஆதனத்தை தாங்கள் வாங்கியது முழுக்க முழுக்க ஒரு வர்த்தகம் தொடர்பான விடயம் என்று அவிக் இன்ரநேசனல் ஹோட்டேல்ஸ் லங்கா-வின் பதில் பொது முகாமையாளர் வென் ஸொங் லிம் தெரிவித்துள்ளார்.

இந்தக் காணி ஒரு பண்பாட்டு மையம் அமைப்பதற்காக இந்திய தூதரகத்துக்கு எல்லையிட்டு ஒதுக்கப்பட்டிருந்ததாக ஆகஸ்டு 12 ல் சண்டே ரைம்ஸ் பெரிய கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது.

இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பது பற்றி தனக்கு தெரியாதென்று அவிக் இன்ரநேசனல் ஹோட்டேல்ஸ் லங்கா-வின் பதில் பொது முகாமையாளர் ஸொங் லிம் குறிப்பிட்டார். அத்துடன் இந்தக் காணிக் கொள்வனவு தொடர்பாக எதிர்ப்பு வலுத்தால், கொழும்பின் இதயம் போன்ற இடத்தில் 180 அறைகளைக் கொண்ட பாரிய ஹோட்டல் கட்டும் திட்டம் கைவிடப்படும் என்றும், அவ்வாறு கைவிடப்பட்டால் இலங்கைக்கு அதிகம் தேவைப்படும் வெளிநாட்டு முதலீடு இழக்கப்படுவதுடன், ஹோட்டல் துறையில் இலங்கை இளைஞர்களுக்குக் கிடைக்கவிருந்த வேலை வாய்ப்பும் இல்லாமல் போய்விடும் என்றும் ஸொங் லிம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment