பாடசாலை அதிபர்களுக்கு கேர்ணல் பதவியா? ஏற்றுக்கொள்ளவே முடியாதாம்! ஆசிரியர் சங்கம்
பாடசாலை அதிபர்களை கேர்ணல் பதவிக்கு நியமிப்பதற்கான இராணுவ பயிற்சிகள் ரன்தெம்பேயில் ஆரம்பிக் கப்பட்டுள்ளது என்றும், அவ்வாறு பாடசாலை அதிபர்களுக்கு கேர்ணல் பதவிகள் வழங்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பயிற்சி, கல்வி நிர்வாக சேவை, மற்றும் அதிபர் சேவை யாப்புகளில் குறிப்பிடப்படாததென்று எனவும், இந்த நடவடிக்கையானது கல்வித்துறையை இராணுவ மயப்படுத்தும் ஒரு செயல் எனவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களிடம் ஒழுக்கத்தை பேணுவதற்காக பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment