போலி டி.ஐ.ஜி யின் மகன் கைது!
குருணாகல் நகரில் கடையொன்றின் ஊழியர் ஒருவரைத் தாக்கிய நபரை குருணாகல் பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது மனைவியைத் தற்செயலாக இடித்த கடை ஊழியரையே அவர் தாக்கியுள்ளார். தாக்கியவர் தான் ஒரு டி.ஐ.ஜி.ன் மகன் என்று கூறியுள்ளார்.
ஆனால் அது பொய்யென்று விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. அவர் தாக்கியது கடையில் உள்ள கெமராக்கள் மூலம் பதிவாகி இருந்ததால் சந்தேக நபரைக் கைது செய்வது பொலிஸாருக்கு இலகுவாக இருந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment