விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் பட்டதை தூரதிஷ்டவசமாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் சில புலிப் புகலிட வாதிகளின் அமைப்புகள், இலங்கை மீது தொடர்ந்து வசைமாரி பொழிந்து வருவதாகவும், இலங்கையின் சுற்றுலாப் பயணத் துறையை சீரழிக்க முயன்று வருகின்றனர் என, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வெளிநாட்டமைச்சர் பேரா. ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் பொருளாதாரம் 8.2%ஆக இருக்கும் போது, போர் நடைபெற்ற வடக்கில் அது 22%மாக இருக்கிறது எனவும், இதிலிருந்தே நாட்டின் அபிவிருத்தியை அனைவரும் உணர்ந்துகொள்ளலாம் எனவும், இலங்கையின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் பரிட்சயமுள்ள பிரித்தானிய வர்த்தகர்ளை, இலங்கைகு வந்து பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிளப்புச் செய்யுமாறும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வெளிநாட்டமைச்சர் பேரா. ஜி.எல்.பீரிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரித்தானிய பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா, மற்றும் பொதுநலவாய பிரித்தானிய கவுன்சில் தலைவர் மோகன் கௌல் ஆகியோருடனும் பேரா.பீரிஸ் சந்திப்புகளை நடாத்தியுள்ளார்.
No comments:
Post a Comment