அம்மன்கோயில் ஐம்பொன் உருவச்சிலை களவாடப்பட்டுள்ளது.
வாழைச்சேனை மீறாவோடை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் எழுந்தருளி ஜம்பொன் உருவச் சிலையானது கொள்ளையர்களினால் களவா டப்பட்டுள்ளதாக வாழைச் சேனை பொலிஸ் நிலையத்தின் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு வேளை இடம்பெற்றுள்ளது.
38 கிலோ கிறாம் எடையுடைய ஜம்பொன் கண்ணகி அம்மன் எழுந்தருளி உருவச் சிலை, குத்து விளக்குகள் மற்றும் ஆலய பூசைக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் போன்றவையே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக ஆலய குருக்கள் சிவஸ்ரீ.செல்வநாயகம் தெரிவித்தார்.
அம்மனின் தங்க ஆபரணங்கள் வங்கியில் பாதுகாப்பாக வைத்ததினால் அவை அதிர்ஸ்ட வசமாக பாதுகாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஆலய உற்சவம் இடம்பெற்று ஒருவாரகாலம் கடந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாலயமானது முஸ்லிம் தமிழ் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment