விமான நிலையங்களில் முழு உடலையும் ஸ்கேன் செய்யும் முறையை நிறுத்த போகிறார்களாம்
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் பின்னர், உலக நாடுகள் விமான நிலையங்களில் இறுக்கமான பாதுகாப்பு முறைமைகள் அறிமுகப் படுத்தப்பட்டன. இதற்கிணங்க ஐரோப்பிய நாடுகளில், பயணிகளின் முழு உடலையும் ஸ்கேன் மூலம் பரிசோதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அத்துடன், ஸ்கேன் கருவியில் இருந்து வெளியாகும் கதீர்வீச்சினால் கேன்சர் உருவாகும் என்றும் பயணிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறது என்று சர்ச்சை எழுந்தது எச்சாறாயினும் கடந்த 2009ம் ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளின் பல விமான நிலையங்களில் ஸ்கேன் பரிசோதனை முறை தொடர்ந்தது.
இந்நிலையில், விமான நிலையங்களில் ஸ்கேன் கருவியை ரத்து செய்ய ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. ஒரு வாரத்தில் ஸ்கேன் கருவிகளுக்கு பதில் வேறு பரிசோதனை கருவி வைக்கப்படும் என்று பல நாடுகள் அறிவித்துள்ளன.
0 comments :
Post a Comment