Sunday, September 16, 2012

அணு தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு விற்றதற்கு பெனசிர் தான் காரணம்- அணு விஞ்ஞானி

சட்டவிரோதமாக அணு தொழில் நுட்பங்களை வெளிநாடுகளுக்கு விற்ற குற்றத்திற்காக, பாகிஸ்தான் அணு விஞ்ஞானியான கான் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் அரசு அணு விஞ்ஞானியான கானை வழக்கில் இருந்து விடுதலை செய்தது.

இந்நிலையில், விடுதலையான கான் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, இந்தியா 1998ம் ஆண்டு அணுகுண்டு சோதனை நடத்தியது. அதற்கு பதிலடியாக அணுகுண்டு சோதனை நடத்த பாகிஸ்தானும் திட்டமிட்டது. ஆனால், அணுகுண்டு சோதனை நடத்தினால், அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாவோம் என்று அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் பயப்பட்டடார். அத்துடன் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியும், பாகிஸ்தான் அமைதியாக இருக்கிறது என்ற நல்லெண்ணத்தை சர்வதேச நாடுகளிடம் உருவாக்க முடியும் என்று அவர் நினைத்தார். அதற்காக அணு விஞ்ஞானிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.

இவ்விடயம் தொடர்பாக நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசி, அணுகுண்டு சோதனைக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் இந்த விஷயத்தை நான் ஊடகங்களுக்கு தெரிவிப்பேன் என்று கூறினேன். வேறு வழியில்லாமல் அணுகுண்டு சோதனை நடத்த நவாஸ் ஒப்புக் கொண்டார்.

அதன் பின்னர் பிரதமர் பெனசிர் புட்டோ என்னை அழைத்து இரண்டு நாடுகளின் பெயர்களை தெரிவித்து, அந்த நாடுகளுக்கு அணு தொழில்நுட்பத்தை வழங்க உத்தரவிட்டார். பிரதமர் சொன்னபடிதான் நான் செய்தான். என்னால் அதை தடுக்க முடியவில்லை என பாகிஸ்தான் அணு விஞ்ஞானியான கான் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment