குடியரசுக்கட்சியிடம் உள்ளதெல்லாம் கடந்த நூற்றாண்டுக்கான செயற்திட்டங்களாம். ஒபாமா
அர்பெண்டேல், அயேவா: குடியரசுக் கட்சியிடம் புதிய சிந்தனை இல்லை. மாறாக கடந்த நூற்றாண்டுச் சிந்தனை யைக் கொண்டதாக அக்கட்சி இருப்ப தாக அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அயோவா மகாணத்தில் பத்தாயிரம் பேருக்கும் மேலானவர்கள் கூடியிருந்த பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய ஒபாமா கூறுகையில், “குடியரசுக் கட்சியின் சிந்தனைகள் கடந்த நூற்றாண்டுச் சிந்தனைகள் என தெரிவித்தார். மேலும் அக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் மிட் ரோம்னி யிடமும் அவரது கட்சியின் ஆதரவாளர் களிடமும் புதிய யோசனைகளே இல்லை.
“அவர்கள் கூறும் யோசனைகளை கடந்த நூற்றாண்டில் நாமெல்லாம் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் வேண்டுமானால் கண்டு வியந்திருக் கலாம். இந்தக் காலத்தில் இதுபோன்ற யோசனைகள் எல்லாம் எடுபடாது,” என்று கடுமையாக விமர்சித்துள்ளார் ஒபாமா.
கடந்த மூன்று நாட்கள் நடந்த பிரசாரக் கூட்டங்களில் ஆப்கானிஸ் தானில் நடந்த போரைப் பற்றியோ அப்போரில் உயிரைப் பணயம் வைத்துப் போரிட்ட வீரர்களுக் காக என்ன திட்டம் வைத்துள்ளார் என்பதைப் பற்றியோ குடியரசுக் கட்சியின் மிட் ரோமினி அறிவிக்கத் தவறிவிட்டார். அதோடு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான நம்பிக்கைக் குரிய திட்டம் எதையும் அவர் முன்வைக்க வில்லை. அக்கட்சியினர் நிறையவே பேசினார்கள். பேசிக்கொண்டே போனார் கள். அவர்களது பேச்சில் வீரம் தெரிந்தது, சொல்ல முடியாத உண்மைகளைக்கூட அவர்கள் சொன்னார்கள். ஆனால் அதையெல்லாம் அவர்களால் எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதை மட்டும் சொல்வதற்கு யாருமே முன்வரவில்லை என்றார் அதிபர் ஒபாமா. அதிபர் ஒபாமா வரும் வியாழக்கிழமை ஜனநாயக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கும் மாபெரும் கூட்டத்தில் உரையாற்றவிருக்கிறார். அவரது பேருரையைக் கேட்க 75,000க்கு மேற்பட்டோர் அங்கு திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவரது சுகாதாரக் கொள்கை, கல்விச் சீர்திருத்தம் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு போன்ற கொள்கைகளை அவர் தற்காத்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment