சரத்திற்கு நிபந்தனை விதிக்கும் ஐக்கிய தேசிய கட்சி
பொது எதிர்க்கட்சிக் கூட்டில் சரத் பொன்சோகாவின் ஜன நாயகக்கட்சி சேர்த்துக் கொள்ள ப்பட வேண்டுமானால், ஐக்கிய தேசிய கட்சி, பொன்சேகாவுக்கு நிபந்தனை ஒன்றை விதித்து ள்ளது. அதாவது பொன்சேகாவின் கட்சி,ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக வசைபாடுபவர்களுடனும், ஒழுக்காற்றுக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்களுடனும், உள்ள தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும் என ஜக்கிய தேசிய கட்சியினர் திஸ்ஸஅத்தநாயக்கா ஊடாக சரத் தரப்பினருக்கு அறிவித்துள்ளனர் என தெரியவருகின்றது.
எனினும் ஏற்கனவே ஐ.தே.க.வும் ம.வி.மு வும் சரத்தின் தலைமையிலான கூட்டணியில் சேர்வதில்லை என்று தீர்மானித்துள்ள நிலையிலேயே இன்நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment