Saturday, September 1, 2012

உண்ணாவிரதம் இருந்த இலங்கைத் தமிழர் இந்திய பொலிஸாரினால் கைது

பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள வர்களை விடுவிக்கக் கோரி உண்ணா விரதம் இருந்த இலங்கைத் தமிழர் செந்தூரன் கைது செய்யப்பட்டு ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 6-ம் திகதி உண்ணா விரதத்தை ஆரம்பித்த இவர், கடந்த 25-ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மீண்டும் 27-ம் திகதி முகாமில் அடைக்கப்பட்டார்.

உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்த அவரை, நேற்று இரவு 10 மணிக்கு பொலீஸார் கைது செய்ததுடன், தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பூந்தமல்லி நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது பரூக்கின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்,

செந்தூரன். தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிபதியின் உத்தரவின் பேரில், புழல் சிறையில் இவர் அடைக்கப்பட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com