Saturday, September 15, 2012

தற்காப்புரிமை தடுக்கும் நீதி. ரமேஸ் மனைவியின் வழக்கு நிராகரிப்பு.

நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி நயோமி ரைஸ் பக்வாட், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வழங்கியுள்ள தடுப்பாற்றல் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு கேணல் ரமேசின் விதவை வத்சலாதேவி தொடுத்த வழக்கை நிராகரித்துள்ளார். சித்திரவதை, கொடுங்கோன்மை, மனிதத் தன்மைக்கு எதிரான செயற்பாடுகள் என்பவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தார் வத்சலாதேவி.

ஜனாதிபதி ராஜபக்ஷ அரச தலைவர்களுக்கு உரியதான தடுப்பாற்றல் பாதுகாப்பு உரிமையை அனுபவிக்கின்றார் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். பிரிதொரு நாட்டின் சட்டமுறைமையின் கீழ் உட்படுத்தப்படுவோம் என்ற பயமின்றி தமது நாடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு ஏதுவாக, நாட்டுத் தலைவர்களுக்கு தடுப்பாற்றல் பாதுகாப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு நிலைநிறுத்தப்பட்ட சட்டம். அது முடிவானது. வழக்காளிகள் தமது கோரிக்கைக்கு அப்பால் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் பக்வாட்.

இது தொடர்பில் தாம் அமெரிக்க மேன்முறையீட்டு நீமன்றத்தில் மேன்முறையீடு செய்யவிருப்பதாக முறைப்பாட்டுக்காரரின் வழக்கறிஞஷர் வீ. ருத்திரகுமாரன் கூறியுள்ளார்.

1 comments :

Anonymous ,  September 15, 2012 at 9:31 PM  

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற விதிமுறைக்கு ஏற்ப தலைவனும், அவன் தளபதிகளும், அடியார்களும் அவர்களுக்குரிய சித்திரவதை, கொடுங்கோன்மை, மனிதத் தன்மைக்கு எதிரான செயற்பாடுகள் என்பவற்றின் அடிப்படையில் பங்கு, பரிகாரங்களை பெற்று அழிந்து, ஒழிந்து விட்டார்கள். இவற்றை முழு உலகமே ஏற்கனவே நன்கு புரிந்துள்ளது. ஆனால் வீ. ருத்திரகுமாரன் போன்ற கோமாளிகள் இன்னும் விளக்கமில்லாதது போல் நடிப்பது
மேலும் தமிழினத்தை கீழ்த்தரமாக்கும் விடையமாகும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com