Saturday, September 15, 2012

வான் பரப்பை மூடியுள்ளது லிபியா! அமெரிக்க உளவு விமானங்கள் லிபியா நோக்கி படையெடுப்பு

அமெரிக்க உளவு விமானங்கள் பென்காசி நகருக்கு மேலாக பறக்க தொடங்கியுள்ளதை அடுத்து, லிபியா தனது வான் பரப்பை மூடியுள்ளது. பென்காசி நகருக்கு மேல் வர்த்தக விமானங்கள் ஏதும் பறப்பதற்கு தடை விதித்துள்ளது. பென்காசி விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அமெரிக்க உளவு விமானங்கள் பென்காசி நகருக்கு மேலாக பறப்பது, அங்குள்ள மக்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக லிபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க உளவு விமானங்கள், அமெரிக்க தூதரகத்தை தாக்கியவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கின்றனவா, அல்லது, அவர்கள் மீது தாக்குதல்கள் தொடுக்க தயாராகின்றனவா என்பது தெரியவில்லை.

அதேநேரத்தில், பென்காசி பகுதியில் உள்ள அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாத அமைப்பினர், எந்த நிமிடத்திலும், அமெரிக்க உளவு விமானத்தை நோக்கி விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இயக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அப்படியொரு நிலைமை ஏற்பட்டு, அமெரிக்க விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டால், அதன்பின் நடப்பவை 'விரும்பத் தகாத விதத்தில் இருக்கும் என்பதை லிபிய அரசு உணர்ந்துள்ளது.

பென்காசிக்கு மேலுள்ள வான்பரப்பை லிபிய அரசு மூடியதன் காரணமே, தரையில் இருந்து அமெரிக்க உளவு விமானங்களை நோக்கி குறிவைக்கப்படும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் ஏதும், வர்த்தக விமானங்களை வீழ்த்திவிடக் கூடாது என்பதற்காகதான்.

இதிலிருந்து, விமான எதிர்ப்பு பீரங்கிகள் வெடிக்கலாம் என்று லிபிய அரசு எதிர்பார்க்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். நிலைமை இறுக்கமாகவே உள்ளது!

லிபியா, பென்காசி நகரில் இருந்த அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டு, தூதரும் கொல்லப்பட்ட24 மணி நேரத்தில், அமெரிக்க உளவு விமானங்கள் பென்காசி நகருக்கு மேலாக பறக்க தொடங்கியுள்ளன.

அமெரிக்காவின் ஆளற்ற உளவு விமானங்கள் (னசழநௌ) பென்காசி நகருக்கு மேல் தொடர்ந்து பறப்பதற்கு சிறப்பு அனுமதி ஏதும் பெறப்படவில்லை. அவை பறப்பது எமக்கும் தெரியும் என்று பெயர் வெளியிடாத லிபிய அதிகாரி ஒருவர், அல்-ஜசீரா டி.வி. சேனலுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரமாக இரு அமெரிக்க உளவு விமானங்கள் தொடர்ந்து பென்காசி நகருக்கு மேலாக பறந்து கொண்டிருக்கின்றன என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை, அமெரிக்க தூதரகத்தை தாக்கியவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கின்றனவா, அல்லது, அவர்கள் மீது தாக்குதல்கள் தொடுக்க தயாராகின்றனவா என்பது தெரியவில்லை.

தரையில் உள்ள குறிப்பிட்ட இலக்கு ஒன்றை ஏவுகணை கொண்டு தாக்கி அழிக்கும் வல்லமை உடையவை, இந்த உளவு விமானங்கள். தூதரகம் மீதான தாக்குதலின் பின்னணியில், லிபிய தீவிரவாத அமைப்பு ஒன்று செயல்பட்டு, அந்த அமைப்பின் மறைவிடத்தை சி.ஐ.ஏ. அறிந்திருந்தால், உளவு விமானங்கள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment