தூக்கு தண்டனை குற்றவாளி நவ்பரிடமிருந்து போகம்பறை சிறைப் பாதுகாப்பு வரைபடம் மீட்பு
2004 நவம்பரில் மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியவைக் கொலை செய்த குற்றச்சாட்டில், தூக்கு தண்டனை பெற்று தற்போது போகம்பரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும், குடு நவ்பர் எனப்படும் நவ்பர் மொகமதிடமிருந்து செல்போன் ஒன்றையும், சிறைச்சாலையின் பாதுகாப்பு வரைபடத்தினையும், போகம்பரை சிறைச்சாலை புலனாய்வு அலுவலர்கள் கைப்பற்றியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது
இவர் தப்பியோடுவதற்கு திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், இவை அவரிடம் எவ்வாறு வந்ததென்பது பற்றிய விசாரணையில் சிறைச்சாலை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளர் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடைச் சிறையில் நவ்பர் இருந்தபோது விஐபி டிரீட்மென்ட் வழங்கப்பட்டதால் கண்டிக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
மேல் நீதிமன்ற நீதிபத சரத் அம்பேபிட்டிய குற்றவாளிகளுக்குத் துணிவாக தண்டனை வழங்குவதில் பெயர் பெற்றவர். மத்திய வங்கி தாக்குதலுக்காக வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 200 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தவர் சரத் அம்பேபிட்டிய என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment