Thursday, September 13, 2012

சம்பந்தனிடம் ஒரு கேள்வி.. தொடர்ந்தும் தமிழன் குருதிசிந்தும் இனமாகவும் குடிசையில் வாழும் இனமாகவுமே இருக்க வேண்டுமா? சத்திரியன்

இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலனில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு அக்கறை இருக்குமாக இருந்தால் இன்று அரசாங்கம் கூட்டமைப்புக்கு காட்டியுள்ள நல்ல சமிஞ்சையை இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும். கிழக்கு மாகாணத்தில் ஒரு நல்லிணக்க ஆட்சியை அமைத்து கிழக்கை அபிவிருத்தி செய்ய எம்மோடு கை கோர்க்க வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் இளைஞர் விவகார அமைச்சர் லடஸ் அழகப்பெரும பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவரது இவ்வழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசோடு சேர்ந்து ஆட்சியை அமைக்க வேண்டும். அவ்வாறு ஆட்சியை அமைக்கும் பட்சத்தில் போரினால் சிதைந்து போன கிழக்கு மாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.

கடந்த கால போர் வரலாற்றில் தமிழனும், சிங்களவனும் அடிபட்டுக்கொள்ள இடையில் புகுந்த முஸ்லிம்கள் அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான் சார்ந்த சமூகத்தையும், கிராமங்களையும் முன்னேற்றவதிலும், அபிவிருத்தி செய்வதிலுமே அக்கறை காட்டினார்கள். இன்று எந்தவொரு சிங்களக் கிராமத்திலோ அல்லது தமிழ் கிராமத்திலோ செய்யப்படாத அபிவிருத்திப் பணிகளை முஸ்லிம் பிரதேசங்களில் காணமுடிகிறது. அந்த அளவிற்கு தேசிய, அரசியலில் திட்டமிட்டு தமது காய்களை நகர்த்திக் கொண்டு போவதில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், அம்மக்களும் கெட்டிக்காரர்களாக இருக்கின்றனர்.

இன்று அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களை எடுத்துக்கொண்டால் அங்குள்ள குக்கிராமங்கள் கூட அபிவிருத்தியால் முன்னேற்றம் அடைந்த கிராமங்களாகவே காணப்படுகின்றன. இதனை சென்று பார்க்க வேண்டுமாக இருந்தால் முஸ்லிம் கிராமங்களுக்குள் புகுந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. இரவு வேளைகளில் அம்பாரை மாவட்டத்தின் பிரதான வீதிகளில் வருகை தருபவர்கள் முஸ்லிம் கிராமங்கள் பகல்போல் ஒளிர்வதையும் தமிழ் கிராமங்கள் இருளடைந்து கிடப்பதையுமே காணலாம். இது ஓர் உதாரணமாகும். அத்துடன் எமது மக்களின் வறுமை நிலையைக் காரணம் காட்டி அவர்களிடம் இருந்து பூர்வீக நிலங்களை அதிக பணத்தைக் கொடுத்து வாங்கிவிட்டு தமிழ் மக்களை அங்கிருந்து விரட்டியடிக்கும் சத்தமில்லா யுத்தத்தையும் முஸ்லிம்கள் இன்று தமிழர்களுக்கு எதிராகச் செய்து கொண்டிருக்கின்றனர்.

போராட்ட காலங்களில் எமது மக்களைக் காட்டிக்கொடுத்து, அரச படைகளோடு சேர்ந்து தமிழ் மக்களைக் கொன்றழித்த முஸ்லிம்களோடு இன்று கை கோர்ப்பதற்கும், அவர்களுக்கு முதலமைச்சர் பதவியை மட்டுமல்ல எதைக் கேட்டாலும் தருகின்றோம் என முஸ்லிம் காங்கிரசிடம் இரங்கல் பிச்சைக் கேட்டு நிற்கும் சம்பந்தன், மாவை, சுமந்திரன் போன்ற வெட்கம்கெட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது நடவடிக்கையைப் பார்க்கும்போது தமிழ் மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது.

முஸ்லிம்களால் தாங்கள் அனுபவித்த வேதனைகளை இன்று கூட அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் மறக்கவில்லை. அம்பாரையில் மட்டும் 27 தமிழ் கிராமங்கள் இருந்த இடம் இல்லாமல் செய்தவர்கள் முஸ்லிம்கள். தமது வறுமையைக் காரணம் காட்டி மண்ணைச் சுரண்டிக் கொண்டவர்களுடன் சேர்ந்து போவதற்கு தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருப்பது அவர்கள் தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகத் தெரியவில்லையா?

சாட்சிக்காரன் காலில் விழுதைவிட சண்டைக்காரன் காலில் வீழ்வது எவ்வளவோ மேல் ஆகும். தமிழ் தேசியக் கூட்மைப்பிலுள்ள சம்பந்தன் தொடக்கம் சக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற பலர் தனது மனைவி மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு அரசாங்கம் கொடுக்கின்ற ஏ.சீ.கார், ஓசி ரூம், டெலிபோன் பில் சம்பளம் கிம்பளம் என்பவற்றையும் பெற்றக்கொண்டு சொகுசு வாழ்க்கையையே கூட்டமைப்பினர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இவர்களில் பலர் இரகசியமாக கூத்தியாள்களை வைத்துக்கொண்டு இரவில் கூத்து அடித்தும் வருக்கிறார்கள். இவ்வாறானவர்களா தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்று கொடுக்கப்போகின்றார்கள்? இனியும் மக்கள் திரை மறைவில் கூத்தடிக்கும் கூட்டமைப்பினரை நம்பி மோசம் போகக்கூடாது. தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நினைத்தால். இன்று அரசாங்கம் விடுத்திருக்கின்ற அழைப்பை ஏற்று அரசோடு சேர்ந்து தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்வதற்கு முன்வரவேண்டும்.

இவ்வளவு காலமும் முஸ்லிம்கள் அரசோடு சேர்ந்து கொண்டு தமது முஸ்லிம் பிரதேசங்களை எவ்வாறு அபிவிருத்தி செய்தார்களோ அதே போன்று போரினால் சிதைந்து போன எமது தமிழ் கிராமங்களையும் அபிவிருத்தி மூலம் மீளக்கட்டியெழுப்புவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசோடு கைகோர்க்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. இவ் பொன்னான சந்தர்ப்பத்தை சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பயன்படுத்த வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ளவர்கள் மட்டும் அரசியல் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், தமிழ் க்கள் அதனை அனுபவிக்க கூடாது என கூட்டமைப்பினர் செயற்படுவார்களாயின் அவர்களைக் கடவுள் கூட மன்னிக்கமாட்டார்.

எம் இனத்திற்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. அவ்வளவு பிரச்சினைகளையும் ஓர் இரவிற்குள் முடித்துவிட முடியாது, படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும். அன்று அரச தொழில்களிலும், கல்வியிலும் கொடிகட்டிப் பறந்த இனமாக தமிழினமே இருந்தது. இன்று நாம் இருந்த உயர்பதவிகளிலும், இடங்களிலும் முஸ்லிம்களும், சிங்களவர்களுமே இருக்கின்றார்கள். இந்நிலைமை எமக்கு ஏற்படக் காரணம் யார்? அன்றிருந்த தமிழ் தலைமைகளாகும். அன்று கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் கோட்டைவிட்டுவிட்டு வெறுமனே தமிழ் மக்களிடம் மேடைகளில் சிங்களத் தலைவர்கள் எம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்று வீதிவீதியாக வீதிநாடகம் போட்டவர்கள் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தற்போதுள்ள கூட்டமைப்பினருமாகும்.

இத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களை; ஏமாற்றியது போதும். தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் கிழக்கில் ஆட்சியமைக்கவுள்ள அரசோடு ஒன்றினைய வேண்டும். நாம் ஒன்றினைய முன்வந்தால் பெரும்பாண்மைச் சமூகமும் சிங்களத் தலைமைகளும் எம்மை செங்கம்பளம் போட்டு வரவேற்பார்கள். முஸ்லிம் சமூகத்தையும் அதன் தலைமைகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் பந்தி தமிழர்களுக்கே கிடைக்கும். நாம் கடந்த 60 வருட காலத்தின் இழந்த பொருளாதாரம், கல்வி, சமூக கட்டமைப்பை வெறும் 05 வருடங்களுக்குள் மீளப் பெற்றக்கொள்ள முடியும். இன்று இருக்கும் முஸ்லிம் பிரதேசங்களை விட ஓர் அழகு மிக்க பிரதேசமாக எமது பிரதேசங்களை பிரகாசிக்க செய்யமுடியும். ஏராளமான படித்த தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க முடியும். இதற்காகவேனும் தமிழ் கூட்டமைப்பு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை இழைத்து தமிழ் மக்களை அதாளபாளத்திற்கு கொண்டு செல்லக்கூடாது.

இன்னும் சர்வதேசம் வரும் என்ற பொய்யைச் சொல்லி தமிழர்களை ஏமாற்றாது, இன்று உலக நாடுகளின் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். சம்பந்தனிடம் மனம் உருகிக் கேட்கிறோம் உங்கள் பிள்ளைகளும், உறவினர்களும் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார்கள். நீங்கள் கூட அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சலுகைகளைப் பெற்றுக்கொண்டு நிம்மதியாக இருக்கின்றீர்கள். ஏன் எமது அப்பாவித் தமிழ் மக்களை மட்டும் குருதி சிந்தும் இனமாகவும், குடிசையில் வாழும் இனமாகவும்வைத்திருக்க ஆசைப்படுகின்றீர்கள்.

வேண்டாமையா உங்கள் கடைசிக் காலத்தில் பாவத்தைச் சுமந்துகொண்டு செல்லாதீர்கள். ஓர் தீர்க்கமான முடிவை எடுத்து தமிழ் மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ அரசாங்கத்தோடு சேர்ந்து தமிழினத்தை வாழவையுங்கள் எனக் கேட்கின்றோம்.

1 comments :

Anonymous ,  September 13, 2012 at 8:00 PM  

உங்கள் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது, அன்றிலிருந்து முஸ்லிம்கள் மட்டுமல்ல, மலையகத் தமிழர்களும் யதார்த்தத்தை புரிந்து கொண்டு காய் நகர்த்தியதன் பயனாகவே இன்று பன்மடங்கு முன்னேற்றம், அபிவிருத்தி, தன்னிறைவு அடைத்துள்ளார்கள்.

ஆனால் அன்றிலிருந்து இன்றுவரைக்கும் பனக்கொட்டை தமிழர், தமிழீழம், தமிழ் தாயகம் என்ற மாயையில், கர்வம், ஆணவம், தலைக்கனம் பிடித்து இதுவரைக்கும் சாதித்தது என்ன? கண்ட விளைவுகள் என்ன?
இனியும் விளங்கிக் கொள்ளாவிடின் அவர்களுக்கு ஒரு பிறவிக்குறைபாடுள்ளது என்பதே அர்த்தம்.

மேலும், இவற்றுக்குகெல்லாம் தன்னலவாத புலி எச்சங்களும், மண்டை கழண்ட புலம்பெயர் தமிழினமே முழுக்காரணம். அவர்களுக்கு இனி தமிழினத்தின் மேல் எவ்விதத உரிமையும் கிடையாது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com