ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் முக்கிய பதவி இலங்கையிடம்
ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின், தகவல் தொழில் நுட்பக்கமிட்டித் தலைவராக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய பசுபிக் வலயத்தில் தகவல் தொழில் நுட்ப சமூகம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, நேற்று கொழும்பில் ஆரம்பமான இம்மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள்களின் ஏகோபித்த முடிவின் படி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஏகமனதாக அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூகஆணைக்குழுவின் தகவல் தொழில் நுட்பக்கமிட்டியின் தலைவர் பதவி இலங்கைக்கு கிடைத்திருப்பது இது மூன்றாவது தடவையாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இத்துறைக்கு வழங்கியுள்ள அரசியல் தலைமைத்துவம் மற்றும் இலங்கையில் தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி போன்றவையே இலங்கைக்கு இத்தகைய கௌரவத்தைப் பெற்றுத் தந்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment