சரத், கரு, ஹிருணிகா ஆகியோர் இணைந்து பொது எதிர்க்கட்சி – ஹேமகுமார நாணயக்கார.
சரத்பொன்சேகா, கரு ஜயசூரிய மற்றும் செல்வி ஹிருணிகா பிரேமசந்திர ஒன்றுணைந்து ஐக்கிய எதிக்கட்சியை உருவாக்குவதற்கு, தமது கட்சி முழு ஆதவைத் தெரிவிப்பதாக மவ்பிம ஜனதா கட்சித் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க, ம.வி.மு மற்றும் பல அரசியல் கட்சிகளுடன் இது தொடர்பாக உத்தியோகபூர்வமற்ற பேச்சு வார்த்தைகள் நடாத்திச் செல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஐக்கிய பொது எதிர்க்கட்சியை கட்டியெழுப்பும் பணியில் அரசில் கட்சிகள், மகாசங்கத்தினர், குருமார்கள், பல்வேறு கொள்கைகளையுடையவர்கள், தொழிவாண்மையினர், கற்றறிந்தோர், பிரபலமானவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரினதும் பெறவேண்டும் என்று ஹேமகுமார நாணயக்கார கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment