சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துக
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத் துவது தொடர்பில் அனைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் சுற்று நிரூபம் மூலம் அறிவுறுத்துவதற்கு பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தீர்மானித்துள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பிரதம நீதியரசரிடம் தெளிவுபடுத்தியதனையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப் பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான தகவல்களை பிரதம நீதியரசரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகளை நான்கு மாதங்களுக்குள் விசாரித்து நிறைவு செய்வதே இதன் நோக்கம் என சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment