சூடானில் உள்ள தமது தூதரகத்தை பாதுகாப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்த பாதுகாப்பு படையை உள்ளே வர சூடான் அனுமதி மறுத்துள்ளது. இதனால், இன்று காலை சூடான் தலைநகர் கார்ட்டூம் சென்று இறங்கிய அமெரிக்க பாதுகாப்பு அணி நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பல நாடுகளிலும் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க தூதரகங்களில், அதிக சேதமடைந்த இடங்களில், கார்ட்டூம் அமெரிக்க தூதரகமும் ஒன்று. அதையடுத்தே, தூதரகத்தை பாதுகாக்க அமெரிக்க விசேட படை சூடானுக்கு அனுப்பியது அமெரிக்கா. அத்துடன், அவ்விசேட படையினர் இன்று முதல் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பை பொறுப்பேற்பார்கள் எனவும் அறிவித்திருந்தது.
ஆனால் சூடான் வெளியுறவு அமைச்சர் அலி அஹ்மத் கார்தி, "எமது நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களை பாதுகாத்துக் கொடுக்கும் திறமை எமது இராணுவத்துக்கு உள்ளது. இதற்காக வெளியே இருந்து யாரும் வரவேண்டிய அவசியம் கிடையாது" என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து அமெரிக்க விசேட படை இன்று மாலை அமெரிக்காவுக்கு திரும்புவார்கள் என சூடான் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன!
No comments:
Post a Comment