கிளிநொச்சிக்கு சென்ற ஐ.நா. குழுவினர் அரசின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி- ரூபவதி
இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பிரதிநிதிகள், நேற்று முல்லைத்தீவில் மீள் குடியேற்றங்கள் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்று அங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிலமைகளை பார்வையிட்டதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும், அபிவிருத்திப் பணிகள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகள் விடயங்கள் குறித்து கேட்டறிந்துகொண்டதாகவும், அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்ததாகவும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment