திருச்சியில் மாயமான இலங்கை பெண் சென்னையில் மீட்பு! கடத்தியதாக பரபரப்பு தகவல்!
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ராமஜெயம் என்பவரின் மனைவி ரூஷாமிலியை கடந்த 2 நாட்களுக்கு முன் காணவில்லை என அவரது கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
இன்நிலையில் சென்னை தியாகராய நகரில் ரூஷாமிலி இருப்பதாக திருச்சி மாநகர பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பொலிஸார் சென்னைக்கு வந்து ரூஷாமிலியை மீட்டனர்.
இது குறித்து மீட்கப்பட்ட ரூஷாமிலி பொலிஸாரிடம் தெரிவிக்கையில், "சம்பவத்தன்று மதியம் நான் டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள ஐ.ஓ.பி. வங்கியில், மகப்பேறு உதவித்தொகை பணம் எடுப்பதற்காக சென்றேன். வங்கியில் பணம் வரவில்லை என்று கூறினார்கள். இதனால் வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தேன். வெயில் அதிகமாக இருந்ததால் தண்ணீர் தாகம் எடுத்தது. சாலை ஓரத்தில் நின்ற ஒரு பெண்ணிடம் தண்ணீர் வாங்கி குடித்தேன்".
இதனால் மயக்கம் அடைந்த எனக்கு அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியாது. நான் கண் விழித்து பார்த்த போது சென்னை தியாகராயநகரில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன். இடையில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நான் அணிந்து இருந்த 4,1/2 பவுன் செயினை யாரோ திருடி சென்று விட்டனர் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்
திருச்சியில் இருந்து சென்னைக்கு ரூஷாமிலியை கடத்தி சென்றது யார்? என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment