அதிரடிப்படை ஆயுதக்களஞ்சியத்தில் வெடிவிபத்து. இருவர் காயம்.
அம்பாறை லாவுகல 10 ம் கட்டையில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாமின் ஆயுதக்களஞ்சியத்தில் நேற்று 24ம் திகதி சிறிய வெடிவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இருவர் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
களஞ்சியத்திலுள்ள ஆயுதங்களை சுத்தம் செய்யும் மாதாந்த பணியில் ஈடுபட்டிருந்தபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றதாக அதிரடிப்படை வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.
0 comments :
Post a Comment