Tuesday, September 25, 2012

மேர்வினும், மாலகவும் ஜனாதிபதிக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றனர்– மேஜர் அஜித் பிரசன்ன.

அமைச்சர் மேர்வின் சில்வாவும், அவரது மகன் மாலக சில்வாவும், ஜனாதிபதினை அவமதிக்கும் வண்ணம் முறையற்று நடந்து கொள்கிறார்கள் என்று, தெற்கு மாகாண சபை அரசாங்க கட்சி உறுப்பினர் மேஜர் அஜித் பிரசன்ன குற்றம் சாட்டுகின்றார்.

யுத்த வீர்ர்களை இழிவுபடுதும் வகையில் நடந்து கொள்வதை தகப்பனும் மகனும் நிறுத்தாவிட்டால், தாம் வீதியில் இறங்கிப் போராடப் போவதாக அண்மையில் காலி தடெல்ல ஹசரா ஓட்டலில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இராணுவ மேஜர் ஒருவரைத் தாக்கி யுத்த வீர்ர்களை அவமானப்படுத்தினார். அத்துடன் விட்டுவிடாமல் பாதிப்புற்ற மேஜர் தனது முறைப்பாட்டையே மீளப் பெறும் அளவுக்கு அவருக்கு அழுத்தமும் மன உளைச்சலும் கொடுத்துள்ளனர். இதனால் பொது மக்களுடனான அரசாங்கத்தின் நற்பெயர் கெட்டு வருகின்றது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com