இராணுவ வீரரின் தாயை சராமாரியாக திட்டி விரட்டிய விமல் வீரவன்ச
போரில் பலியான இராணுவ வீரரின் தாயாரான விஜித குமாரி நவரத்னவை, பொறியியல் சேவைகள் மற்றும் வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச சராமாரியாக திட்டி விரட்டியதாக குறித்த இராணுவ வீரரின் தாயர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, அரசாங்கத்தின் "ஜன செவன" பத்துலட்சம் வீட்டுத் திட்டத்தின் கீழ், இராணுவ வீரர்களின் தாய்மார்களுக்கு வீடு வழங்குவது தெடர்பாக விசாரிப்பதற்காக, குறித்த இராணுவ வீரரின் தாயார் பொறியியல் சேவை மற்றும் வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சுக்கு சென்றபோது, "வீடு இல்லாவிட்டால், வீடு பெற்றுக் கொடுக்கும் படியா செல்கிறீர்கள்" என்று தன்னை விமல் வீரவன்ச சராமாரியாக ஏசி விரட்டியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கை காலாட்படையின் 10 வது படையணியைச் சேர்ந்த 316608 இலக்க கோப்பரலான பனாமல்தெனிய என்ற பெயருடைய தனது மகன், 2009 பெப்ரவரி 22 ல் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கடமையில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்து விட்டார் என்றும், தான் வசித்து வந்தது வாடகை வீடாகும் என்றும், தன்னைப் பாதுகாத்த பிள்ளை இறந்ததனால் தான் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகியதாகவும் ,மகனின் பெயரில் மாதாமாதம் கிடைக்கும் நட்ட ஈடு 3900 ரூபாவிலேயே வாழ்க்கையை ஓட்டுவதாகவும் கூறிய அவர், ரணவிருகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தில், தனக்கும் வீடு வழங்குவதாக அமைச்சர் வீரவன்சவின் கையொப்பத்துடன் கடிதம் வந்திருந்ததாகவும் கூறினார். எனினும் இன்று வரை வீடு கிடைக்காததினால் அது பற்றி விசாரிக்கச் சென்ற போதே அமைச்சர் தன்னை இவ்வாறு அவமதித்ததாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி பொது முகாமையாளர் தர்மஸ்ரீ காரியவசம் கருத்து தெரிவிக்கையில்,அமைச்சரிடம் வீடு கிடைக்காது என்றும், அது தொடர்பான கடன் திட்டத்தின் ஊடாக வீடு கொடுக்கும்படி கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
1 comments :
ministers should know how to respect the mother,this mother lost her velueable son becouse of the country so the government must be take more care about there familys,just 3900 rupees never will bring her son back to live
Post a Comment