கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பில் தம்முடன் கலந்துரையாடுவதற்கு வருமாறு, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதே போன்று கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடமிருந்து தனக்கு முதலாவதாக தொலைபேசி அழைப்பு வந்தது எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை ஆட்சியை அமைப்பதற்கான ஆதரவினை யாருக்கும் வழங்குவதற்கு முன்னர்- கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாட வேண்டுமெனவும் எவ்வாறாயினும் அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை உருவாக்குவதற்கு ஆதரவளிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment