த.தே.கூட்டமைப்பு நடைமுறை சாத்தியமான விடங்களை சிந்திக்க வேண்டும் - பிரபா
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடைமுறை சாத்தியமான விடங்களை பின்பற்ற வேண்டுமெனவும், 1008 தேங்காய்களை உடைப்பதை தவிர்த்து பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டுமெனவும், பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன் தெரிவித்துள்ளார்.
மக்கள் வழங்கிய வாக்குகளின் ஊடாக பாராளுமன்ற கதிரையில் அமர்ந்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர், யதார்த்த ரீதியாக சிந்திக்க வேண்டுமெனவும், பேச்சுவார்த்தைகளின் மூலமே தமது கோரிக்கைகளை முன்வைக்க முடியும் எனவும், அதனை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேங்காய் உடைப்பதும், வேண்டுதல்களை வைப்பதும் நடைமுறை சாத்தியமான விடயமல்ல எனவும், அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் எதிர்காலத்தில் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் பிரபா கணேஷன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment