முதலமைச்சர் பதவிக்காக முட்டிமோதும் முஸ்லிம் கட்சிகள்
கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதற்காக அரசாங்கத்துடன் இணைத்திருக்கும் முஸ்லிம் கட்சிகள் பாரிய பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்கவதற்காக முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துடன் பேரம் பேசும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அதற்கினங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை, இலங்கை மக்கள் காங்கிரஸ் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். இதற்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான அமீர் அலியை கிழக்கு மாகாண முதலமைச்சராக்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், கிழக்கு மாகாண முதலமைச்சர் என்பது பொம்மையாக இருக்கும் பதவியல்ல என்றும், கிழக்கிலுள்ள அனைத்து சமூகங்களையும் அரவணைத்து கிழக்கிலுள்ள அனைத்து பிராந்தியங்களுக்கும் சேவையாற்றும் பதவி என்றும், அதற்கு அமீர் அலியே பொருத்தமானவர் என்றும், அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிடின் அதன் விளைவை அரசாங்கம் எதிர்நோக்கும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த உறுப்பினர் ஒருவரே ஆசனத்தில் அமரப் போகின்றார் என்பது உறுதியாகிவிட்டது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பொறுத்திருந்து பார்போம் யார் முதலமைச்சர் ஆசனத்தில் அமரபோகின்றார்கள் என்று.
0 comments :
Post a Comment