கிழக்கு மாகாணத்தில் ஏற்படுகின்ற திடீர் விபத்துக்கள், மற்றும் வீதி விபத்துக்களுக்கு உள்ளாகுபவர்களுக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு, புதிய வைத்தியசாலையொன்று அமைக்கப்படவுள்ளது.
சகல வசதிகளையும் உள்ளடக்கிய வகையில், சுமார் 10 லட்சம் ரூபா நிதிச்செலவில் குறித்த புதிய கட்டிடம் அமைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு சகல நிதியுதவிகளையும், அவுஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்திலுள்ள இலங்கை வாழ் மக்கள் வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் அவுஸ்திரேலியா விக்டோரியாவிலுள்ள இலங்கை வாழ் மக்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய குறித்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவசர விபத்துகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரதான நோக்கிலேயே குறித்த வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment