அதிரடிப் படையினரின் விசேட சுற்றிவளைப்பு! வெலிகடை சிறைச்சாலையில் பல பொருட்கள் மீட்பு!
கொழும்பு வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, கைதிகள் பயன்படுத்திய பல சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன என்றும், சிறைச்சாலை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், விசேட அதிரடிப்படையினர் இச்சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,நேற்று வெலிகட சிறைச்சாலையில், விசேட சுற்றிவளைப்பு மேற் கொள்ளப்பட்டது. விசேட அதிரடிப்படையினரும், பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரும் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது 126 கையடக்க தொலை பேசிகளும், 30 சிம் அட்டைகளும், 40 ஹேன்ட் ப்ரீக்களும், 30 க்கும் மேற்பட்ட பற்றறிகளும், 30 ஹெரோயின் பக்கற்றுக்களும் கைப்பற்றப்பட்டன என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த காலங்களில் சிறைச்சாலையில் இருந்து கொண்டு பல்வேறு குழுக்கள் கப்பம் பெறுதல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, தகவல் கிடைத்திருந்ததாகவும், கையடக்க தொலைபேசிகள் மூலமே, கைதிகள் இவற்றை மேற்கொண்டு வருவதாக, எமக்கு தகவல் கிடைத்தது. கைப்பற்றப்பட்ட கைடயக்க தொலைபேசிகள், சிம் அட்டைகள் ஆகியன ஊ10டாக, யாருடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது தொடர்பான விசாரணைகளை, நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதுபோன்ற குற்றச் செயல்களை தடுப்பதற்காக, சிறைச்சாலை அதிகாரிகள் கோரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நடவடிக்கை எடுக்க, நாங்கள் தயாராகவுள்ளோம் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment