டுபாயில் குறிப்பிட்ட சில தொழில் துறையினருக்கு வீசாக் கட்டுப்பாடு
பிலிப்பைன்ஸ், இந்தியா, வங்கதேசம், இலங்கை, போன்ற நாடுகளிலிருந்து டுபாயில் வேலை தேடிச்செல்லும் பலர் சுற்றுலா விசாக்களிலும், கருத்தரங்குகளில் பங்கேற்கும் விசாக்களிலும், சென்று அங்கேயே தங்கியிருகக்கின்றனர் என அன்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு வருபவர்களில் பலர் நாடு திரும்பாமல், டுபாயிலேயே சட்ட விரோதமாக தங்கியிருந்து வேலை தேடி அலைவதுடன், வேலை கிடைக்காமல் ஷாப்பிங் மால்கள், மருத்துவமனை போன்ற இடங்களில் பிச்சை எடுக்கின்றனர் என்றும், பிழைப்பதற்கு வழி இல்லாததால் பலர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும், டுபாய் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், விசா நடைமுறைகளை கடுமையாக்க டுபாய் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக சில நாட்டு தொழிலாளர்களுக்கு விசா வழங்க தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலத்திரனியலாளாகள், பைப் பிட்டர்கள், விவசாயிகள், சாரதிகள், தையலாளர்கள், சுத்தம் செய்யும் பணியாளர்கள், போன்றோருக்கு விசா வழங்கும் நடைமுறைகளை கடுமையாக்கவுள்ளதாகவும், டுபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment