புலிகளியக்கம் புலம்பெயர் தேசத்தில் பிளவு பட்டு நிற்கின்றது. அங்கே தமைமைச்செயலகம், அனைத்துலக்செயலகம் என இரு பிரிவுகள் இயங்குகின்றது. அனைத்துலகச் செயலகம் நெடியவனை தலைமையாக கொண்டு செயற்படுகின்றது. இப்பிரிவின் பிரித்தானியக் கிளையின் முக்கிய செயற்பாட்டளராக இருந்துவந்ததவர் தனம். இவர் கடந்த ஒருவார காலமாக தனது முழுச்செற்பாடுகளையும் நிறுத்தி வெளியேறியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இவர் வெளியேறியுள்ளமைக்கான சரியான காரணங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. மேற்படி இரு குழுக்களுக்குள்ளும் இலங்கைப் புலனாய்வுத் துறை ஊடுருவி உள்ளது. இவ்வாறு ஊடுருவி உள்ள புலனாய்வுத்துறையினர் இக்குழுக்களின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் உதவியாளர்களை இனம்கண்டு அவர்களை செயலிளக்கச்செய்து வருகின்றனர்.
தனம் சில மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் வைத்து தாக்குதலுக்கு உள்ளானவர். இத்தாக்குதலை தலைமைச்செயலகம் எனும் குழுவைத்சேர்ந்த சங்கீதன் குழுவினரே மேற்கொண்டிருந்தனர் என்ற சந்தேகங்கள் இருந்தன.
செயற்பாடுகளை நிறுத்தியுள்ள தனம் நண்பர்கள் வட்டத்திடம் தனது வெளியேற்றம் குறித்து கூறும்போது, தனது குழந்தைகளை கண்டால் சகமாணவர்கள் கள்ளனின் பிள்ளை என்று கூறுகின்றார்களாம் எனவும், இந்நிலைமை தொடர அனுமதிக்க முடியாது என்ற நிலையில் தான் வெளியேறியுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் காரணம் வேறு என அவதானிகள் கூறுகின்றனர்.
தனம் சங்கீதன் குழுவினரால் தாக்கப்பட்டிருந்தபோது பிடிக்கப்பட்ட படம் இது.
No comments:
Post a Comment