Wednesday, September 5, 2012

மாற்று வழியை பயன்படுத்தும் சட்டவிரோத படகுக் காரர்கள்

இலங்கைக் கடற்படை வடமேற்கு மற்றும் கிழக்கு கரையில் தனது கண்காணிப்பு நடவடிக்கையை துரிதப் படுதியுள்ளதால், சட்டவிரோதமாக அவுஸ்த்திரேலியா செல்ல முயற்சிப் பவர்கள் வேறு மார்க்கங்ளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என தெரியவருகின்றது.

இவ்வாறு பயன்படுத்த ஆரம்பித்திருக்கும் மாற்று மார்கங்களில், வடக்குக் கடற்பிரதேசமும் ஒன்றாகும். அண்மையில் வடமராட்சி கிழக்கில் வைத்து மீன்படிப்படகில் நீர்கொழும்பைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்களை விசாரித்த போது மீன் வாங்குவதற்காக வந்ததாகக் கூறியதுடன், அவர்களிமிருந்து 1.5 மில்லியன் ரூபா பணம் கண்டு பிடிக்கப்பட்டது.

அதனையடுத்து அவர்கள் பருத்தித்துறை நீதவான்மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரித்ததில் 63 பேரைக் கொண்ட படகை கடற்படை பிடிக்கமுடிந்தது. இவர்களில் 15 வயது சிறுவன் ஒருவனை தவிர மற்றயவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள்.

சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் வேறு மார்க்கங்களைத் தெரிவு செய்து தமது பயணங்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றார்கள் எனவும், அவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, பகுதிகளைச் சேர்ந்தவர்கள என்று கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரியா சண்டே ரைம்ஸ்க்குக் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment