சஜித்திடம் உறவு கொள்வதை விட ரணிலுடன் உறவு கொள்வது கௌரவமானது!
ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் உறவு கொள்வதை விட, எதிர் கட்சி தலைவர் ரணிலுடன் உறவு வைப்பது கௌரவமானது என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
திரான் அலசுடன் ஏற்பட்ட முறுகலைத் தொடர்ந்து சஜித் பிரேமதாசவுடன் சரத் பொன்சேகாவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனைச் சீராக்க மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து, பாரிய எதிரக்கட்சி ஒன்றினை உருவாக்கும் தனது முயற்சிக்கு, தனது கட்சியில் உள்ள சிலரே தடையாக இருந்ததாகவும், அந்த தடை இப்போது நீங்கிவிட்டாகவும், அந்த கூட்டணியை உருவாக்க எதிர்கட்சித் தலைவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது எனவும், சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்.
அதற்கு முன்னர் தான் தலைமை தாங்கும் ஜனநாய கட்சியை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு முயற்சி எடுத்து வருவதாகவும், அரசாங்கத்தில் உள்ள பெரும் புள்ளிகள் இதற்குத் தடையேற்படுத்தி வருவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment