இலங்கைப் படையினருக்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும -சீனப் பாதுகாப்பு அமைச்சர்
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடை யிலான இரு தரப்பு உறவுகள் தொடர வேண்டுமெனவும், இலங்கைப் படை யினருக்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீ, நகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸவுடன் நடத்திய சந்திப்பின் போது உறுதியளித்துள்ளார்.
நகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸவுடன பாதுகாப்பு அமைச்சில் நடந்த சந்திப்பிலேயே சீன பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
அத்துடன் குறைந்த செலவிலான இராணுவ உதவித் திட்டங்கள், ஆளளி பயிற்சிகளை விஸ்தரித்தல், கடற்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விஸ்ரித்தல், பயங்கரவாத ஒழிப்பு நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ளல், போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் படையினருக்கான கல்லூரியில் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதறகு நிதியுதவி வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார். இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கையெழுத்திடப்பட்டது.
இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் பின்னரான காலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடித்தன் பின்னர் அடைந்துள்ள வெற்றிகள் குறித்து சீன தூதுக்குழுவினருக்கு நகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர கோத்தபய ராஜபக்ஸ விளக்கமளித்துள்ளார்.
0 comments :
Post a Comment