வடக்கில் யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் கொலன்னாவையில் இன்னும் போதைப் பொருள் யுத்தம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது என்றும், வடக்கில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போல, போதைப் பொருள் மற்றும் பாதாளவுலக யுத்தத் தையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென, நாம் ஜனாதிபதியைக் கோருகின்றோம் என்று செல்வி ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் கட்சியின் வட கொழும்பு அலுவலகத்தை திறந்து வைத்த பேதே செல்வி ஹிருணிகா பிரேமசந்திர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது வியர்வை, கடும் உழைப்பு, மற்றும் இரத்தத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சிக்குள்ளே உருவாகிய எனது தந்தையை, புதிதாக எங்கிருந்தோ வந்து, தனது இலாபத்துக்காக மட்டுமே செயற்பட்டவரின் கையால் படுகொலை செய்ததே, என்னை வேதனைக்கு உள்ளாக்குகின்றது என செல்வி ஹிருணிகா தெரிவித்து ள்ளார்.
மேலும் நாளை இதே மாதிரியான நிலைமை மற்ற சகோதரிகளுக்கும் ஏற்படும் எனவும், ஆனால் அந்த சகோதரிகளுக்கு இவ்வாறான மேடைகளில் வந்து தமது துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு இடமிருக்காது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment