மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு
மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கு மேலும் அதிகளவு வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளதாகவும், ஐக்கிய அரபு இராச்சியம், இலங்கையின் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான தொழிலா ளர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு, இணக்கம் தெரிவித்துள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அமைப்பின் தலைவர் சேனக அபேகுணசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் சரத் விஜேசிங்கவின் ஏற்பாட்டில், இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன்,அபுதாபி நகரில் இடம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாநாட்டின் பின்னர், இலங்கை அரசின் வெளிநாட்டு கொள்கைகள் பாராட்டப்பட்டதையடுத்து, இவ்வாறு அதிகளவு இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க, அந்நாடு தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித் துள்ளார்.
அத்துடன் ஹொட்டேல் நிர்வாகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சிபெற்ற ஊழியர்களை இணை த்துக்கொள்வதற்கு, ஐக்கிய அரபு இராச்சியம் தயாராக விருப்பதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அமைப்பின் தலைவர் சேனக அபேகுணசேகர தெரிவித் துள்ளார்.
0 comments :
Post a Comment