திவிநெகும சட்டமூலத்தை மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்கு அனுப்ப வேண்டும் - நீதிமன்றம்
திவிநெகும சட்டமூலத்தை மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்கு அனுப்ப வேண்டும் என்று, பாராளுமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பிற்கு அமைய மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களுடன் குறித்த சட்ட மூலம் தொடர்புடையதனால், குறித்த சட்டமூலம் மாகாண சபைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும், அத்துடன் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத பட்சத்தில், அது சட்டமாக மாற்றப்படாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment