அமெரிக்கர் வெளியிட்ட திரைப்படத்திற்கு பான் கி மூன் கண்டனம்
அமெரிக்காவில் இஸ்லாமிய மதத்துக்கு எதிராகவும், முஹமது நபியை அவதூறாக சித்தரித்து வெளியிடப்பட்ட திரைப்படமானது, கொலை முயற்சி களை ஊக்குவிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட திரைப்படத்தினால் லிபியா, எகிப்து, யேமன், மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களும், தாக்குதல்களும் நியாயமற்றது என என ஐ.நா. பாதுகாப்பு சபையும், அதன் நாடுகளின் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஐ.நா. உயர் பிரதிநிதி ஜோர்ஜ் கம்பியோ, அமெரிக்க வெளிவிவகார இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், தற்போது ஏற்பட்டுள்ள வெறுப்பான சூழ்நிலை, ஆபத்தான நிலைமை மற்றும் தாக்குதல்கள், மத அடிப்படையிலான வன்முறைகள் கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment