குண்டை வெடிக்க வைத்து இராணுவ மேஜர் தற்கொலை !
மாத்தறை திஹகொட பிரதேசத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறினை தொடர்ந்து அநுராதபுரம் பிரதேசதின் ராணுவ முகாமொன்றில் சேவையாற்றும் மேஜர் ஒருவர் கிரனைட் ஒன்றை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தகவல் வழங்குகையில் ..
இன்று காலை 10.15 அளவில் திஹகொட பொலிஸ் அதிகார பிரதேசத்தில், திஹகொட ஹக்மனை வீதியில், நபர் ஒருவர் வெடிபொருட்களை பயன்படுத்தி, தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் 37 வயது நிரம்பியவர் என்றும், அவர் குருநாகல், ஹிரியாலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும், தெரியவந்துள்ளது. அதேபோன்று, அநுராதபுரம் பிரதேசதின் ராணுவ முகாமொன்றில் சேவையாற்றும் உத்தியோகத்தர் என்றும், அறியக்கிடைத்துள்ளது.
திருமணமாகி இரு பிள்ளைகளுக்கு தந்தையான இவர், கம்புறுபிட்டிய பிரதேசத்தில், 17 வயதுடைய யுவதியொருவருடன் காதல் தொடர்பு வைத்துள்ளார். இவர் திருமணமானவரென்பதால், இவருடான உறவினை தொடர, யுவதி மறுத்துள்ளார். இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை அடுத்து, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர் தனது வாகனத்திற்குள் சென்று வெடிபொருட்களை வெடிக்க வைத்து, தற்கொலை செய்து கொண்டுள்ளார். க்ரேனைட் வகை கைக்குண்டு இதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாமென, நம்பப்படுகிறது. சம்பவம் தொடர்பில், திஹகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் மாத்தறை மஜிஸ்திரேட் வரவழைக்கப்பட்டு, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளும் இடம்பெற்றுள்ளன. உரிய யுவதி மற்றும் அவரது பெற்றோரிடம், வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment